தனியார் பள்ளிகளும் கட்டாயம் கோடை விடுமுறையை விட வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை

கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை: அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் போது, தனியார் பள்ளிகளும் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், " தனியார் பள்ளியாக இருந்தாலும் கோடை காலங்களில் விடுமுறை விடப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வை சந்திக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் மன நிலையைக் கருத்தில் கொண்டு 4,000 பேருக்கு தனி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். 

மேலும், தகுதி தேர்வு மூலம் நான்காயிரம் பேரை தேர்வு செய்ய உள்ளோம். அவர்களுக்கு ஒன்பது கல்லூரிகளில் தனி பயிற்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் துறைக்கு சென்றாலும் சிறந்து விளங்க இதுபோன்ற பயிற்சிகள் பயன்படும்," எனக் கூறினார். 

இதேபோல, கூட்டம் காரணமாக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வது குறித்து புகார்கள் வந்தால், போக்குவரத்து துறை அமைச்சரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...