நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற இருந்த புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் குதிரை பந்தய ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உதகையில் கோடை சீசனில் துவங்கும் குதிரை பந்தயமானது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் தொடங்கும். இதில், பெங்களூரு, மைசூரு, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களிலிருந்து சுமார் 600 குதிரைகளும், 20 பயிற்சியாளர்களும், 50 க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பிற ஊழியர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான 132-ம் ஆண்டு குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஓடுதளம், குதிரைகளுக்கான குடில்கள், ஊழியர்கள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சங்க உட் பிரச்சனைகளால் ஏப்ரல் 14ல் துவங்கும் குதிரை பந்தயத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உதகையில் உள்ள குதிரை பந்தய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த குதிரை பந்தயம் தள்ளிப்போவதால் உள்ளுர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.