மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலை கட்டி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...