குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் சேவை இன்று தொடக்கம்

மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் தொடங்கியது.


மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் தொடங்கியது. 



சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டின் கோடை சீசனுக்கு, சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 31) முதல் ஜூன் 26-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கூட்டம் காரணமாக வழக்கமாக செல்லும் மலை ரயிலில் பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்த சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த கூடுதல் மலை ரயிலின் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தபடி இன்று முதல் கோடைக்கால சிறப்பு மலைரயில் சேவை துவங்கியது.



மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 12.30 மணியளவில் குன்னூர் வந்தடையும். பின்னர், குன்னூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்றடையும் வகையில் இந்தச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு கடந்த 14-ம் தேதியிலிருந்து துவங்கியது. முதல் இரு பெட்டிகளில் 16 மற்றும் 36 இருக்கைகள் கொண்ட முதல், இரண்டாம் வகுப்புகள் உள்ளன. 3-வது பெட்டியில் 28 இருக்கைகள் கொண்ட இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. 



இந்தச் சிறப்பு ரயில் பயணத்தை மறக்கமுடியாத தருணமாக ஏற்படுத்த, பயணிகள் அனைவருக்கும் சமோசா, நீலகிரி தேநீர், பழரசம், தண்ணீர் பாட்டில் போன்ற சிற்றுண்டிகள் மற்றும் பானங்களுடன் நீலகிரி தைலம் கொண்ட ஒரு பாட்டில், டான்டீயின் தயாரிப்பான நீலகிரி தேயிலைப் பொட்டலம், நீலகிரி பாரம்பரிய ரயில் சேவை பற்றிய ஒரு சிறு கையேடு, ஒரு சாவிக் கொத்து மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல ரயில்வே முத்திரை கொண்ட ஒரு பை போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்க சேலம் ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது.



 

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

முதல் வகுப்பு : 

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.1,100/- 

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.1,100/- 

இரண்டாம் வகுப்பு : 

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800/- 

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.800/- 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...