காவிரி விவகாரம்- ஏப்ரல் 2ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு

காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

இதில், காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...