"செய்கை மொழிக்கென தனி அடையாளம் உள்ளது"

கோவை : வாய் மற்றும் காது ஊனமுற்றோர்கள் பயன்படுத்தும் செய்கை மொழிக்கு தனி அடையாளம் இருப்பதாக சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி கூறினார்.

கோவை : வாய் மற்றும் காது ஊனமுற்றோர்கள் பயன்படுத்தும் செய்கை மொழிக்கு தனி அடையாளம் இருப்பதாக சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி கூறினார். 



காது கேளாதோர் அறக்கட்டளை, ரத்தினம் கல்லூரி, சிம்பிள் சொல்யூசன்ஸ் மற்றும் ஃபேமிலி கேர் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'நிலையான செய்கை மொழி' என்ற தலைப்பில் தென்னிந்திய அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். இதில், சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். 



இதைத்தொடர்ந்து, அவர் பேசியதாவது:- செய்கை மொழிக்கு தனி அடையாளம் உள்ளது. இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே செய்கை மொழித் திறனை அதிகரிக்கச் செய்ய இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள செய்கை மொழியே காரணியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 



நிகழ்ச்சியில் ஃபேமிலி கேர் தொண்டு நிறுவன தலைவர் ரேணுகா ரமேஷன் சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "செய்கை மொழி காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு முதன்மையாக உள்ளது. கேட்கும் திறன் குறைவாக இருப்பவர்களைப் புரிந்து கொள்வதற்கு, இந்த மொழி உதவியாக உள்ளது. இந்த மொழிக்குப் பிற மொழிகளைப் போல இலக்கணம், வாக்கிய அமைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லை. இருப்பினும், இந்த மொழி பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்கள் செய்கை மொழியைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, வாய் மற்றும் காது ஊனமுள்ள மாணவர்களுக்கு கல்வியை முழுமையாகக் கொண்டு போய் சேர்க்க முடியும்," என்றார். 



தென்னிந்தியா முழுவதும் சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், இந்தியா டெஃப் நியூஸ் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...