மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம்: கோடை சீசனையொட்டி குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டின் கோடை சீசனுக்கு, சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (மார்ச் 31) முதல் ஜூன் 26-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 12.30 மணியளவில் குன்னூர் வந்தடையும். பின்னர், குன்னூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்றடையும் வகையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன் பதிவு கடந்த 14-ம் தேதியிலிருந்து துவங்கியது. முதல் இரு பெட்டிகளில் 16 மற்றும் 36 இருக்கைகள் கொண்ட முதல், இரண்டாம் வகுப்புகள் உள்ளன. 3-வது பெட்டியில் 28 இருக்கைகள் கொண்ட இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன.

இந்த சிறப்பு ரயில் பயணத்தை மறக்கமுடியாத தருணமாக ஏற்படுத்த, பயணிகள் அனைவருக்கும் சமோசா, நீலகிரி தேநீர், பழரசம், தண்ணீர் பாட்டில் போன்ற சிற்றுண்டிகள் மற்றும் பானங்களுடன் நீலகிரி தைலம் கொண்ட ஒரு பாட்டில், டான்டீயின் தயாரிப்பான நீலகிரி தேயிலைப் பொட்டலம், நீலகிரி பாரம்பரிய ரயில் சேவை பற்றிய ஒரு சிறு கையேடு, ஒரு சாவிக் கொத்து மற்றும் அவற்றை எடுத்துச் செல்ல ரயில்வே முத்திரை கொண்ட ஒரு பை போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்க சேலம் ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
முதல் வகுப்பு :
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.1,100/-
குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.1,100/-
இரண்டாம் வகுப்பு :
மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800/-
குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs.800/-