திருப்பூர் எம்.பி. சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி : கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் எம்.பி. சத்யபாமாவை கொலை செய்ய முயற்சி : கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா (45) வசித்து வருகிறார். திருப்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யான இவருக்கும், கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சத்யபாமாவை, அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் சத்யபாமாவின் கணவர் வாசு மீது கொலை முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சத்யபாமாவுக்கும், வாசுவுக்கும் 1990ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் கணவர் வாசு, சத்யபாமாவை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...