மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை தாக்கியதில் 6 ஆடுகள் பலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அண்மைக் காலமாக வனவிலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. 



இந்நிலையில், நேற்று நள்ளிரவு மேடூர் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை சிவக்குமார் என்பவரது தோட்டத்தினுள் நுழைந்துள்ளது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை தாக்கி உள்ளது. மொத்தம் ஆறு ஆடுகளை கழுத்து பகுதியில் கடித்து குதறிவிட்டு, சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. ஆடுகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் ஆடுகள் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காரமடை வனத்துறையினர் ஆடுகள் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தையா அல்லது வேறு விலங்குகளாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது :- சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தால் நாங்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளோம். கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும். என்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...