திருப்பத்தூர் - காகங்கரை இடையிலான ரயில்பாதையில் உள்ள மின்கம்பி முறிவால், ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பத்தூர் மற்றும் காகங்கரை இடையே உள்ள ரயில்பாதையில் மின்கம்பி முறிந்து விழுந்துள்ளது. இதனால், சேலம் ஜோலார்பேட்டை பிரிவில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரை - சென்னை டுரன்டோ எக்ஸ்பிரஸ் (22206), திருவனந்தபுரம் - சென்னை மெயில் (12624) ஆகிய ரயில்கள் காகங்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மங்களூரூ - சென்னை எக்ஸ்பிரஸ் (12686) சாமல்பட்டியிலும், எர்ணாகுளம் - சென்னை சிறப்பு ரயில் தோடம்பட்டியிலும், கொச்சுவெளி - பெங்களூரூ எக்ஸ்பிரஸ் மொரப்பூரிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, திருவனந்தபுரம், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22641) லோகூரிலும், திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (12696) கருப்புவிலும், எர்ணாகுளம் - ஐதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (07118) பொம்மிடியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுந்து விழுந்துள்ள மின்கம்பியை சீரமைக்கும் பணி முடிய சுமார் 2 மணி ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு காரணமாக ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.