சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
- காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்.
- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.
- நேர்மையற்ற முறையில் நடக்காதக் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
- நியூட்ரினோ திட்டஅனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.
- ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க., தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு.
- மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.