காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரத போராட்டம் இந்தியாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியில் உரிமையை அ.தி.மு.க., ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடக்கும். அ.தி.மு.க.வின் இந்த அறப்போராட்டத்தில் மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.