ரூ. 20 லட்சம் மதிப்பிலான இலவச கழிப்பறைகளை பயனாளிகளுக்கு வழங்கிய மார்ட்டின் அறக்கட்டளை

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கோவை : கோவையில் மார்ட்டின் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான கழிப்பறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி பல்வேறு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளின் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லா பகுதியாக துடியலூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளை மாற்றும் நடவடிக்கையாக மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டன. கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப்பின் உதவியுடன் சுமார் ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன.



இந்த நிலையில், இந்த இலவச கழிப்பறைகளை 165 பயனாளிகளுக்கு மார்ட்டின் அறக்கட்டளையின் அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஏழை, எளியவர்களுக்கு இலவச கழிப்பறைகளை கொடுக்க வேண்டும் என்பது தனது கணவரின் நீண்ட நாள் கனவு. இதற்காக, அவர் ரூ. 5 லட்சம் தருவதாக கூறினார். ஆனால், தற்போது, ரூ. 20 லட்சம் செலவில் இந்தக் கழிப்பறைகளை கட்ட நிதியளித்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...