தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சியை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் மகாவீர் ஜெயந்தியன்று, தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். 



மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் இயங்கக் கூடாது என்பது அரசு விதி. விதியை மீறி செயல்பட்ட கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், இன்று திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியில் செயல்பட்ட இறைச்சி கடைகளின் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். 

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு மாநகராட்சி வாகனத்தை ஒட்டுநர் ரமேஷ் ஒட்டி வந்தார். திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் அருகே வந்த போது, இறைச்சி கடையைச் சேர்ந்த சித்திக் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் பொருட்களை எடுத்து வந்ததை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக சித்திக் மீது திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...