டாஸ்மாக்கில் அரசியல் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி மாநாடு

டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர்.

கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கோவையில் மாநாடு நடத்தினர். 



சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, 

இதில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலை ஆணை சட்டம் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பணிமாறுதல், கடை ஆய்வு, சரக்கு கொள்முதல், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்த அனுமதி என்று அதிகாரிகள் தங்களின் இஷ்டம் போல செயல்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அரசுக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க உடனடியாக நிலை ஆணை உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசியல் தலையீட்டின் காரணமாக மதுக்கூடங்கள் முறைகேடாக செயல்படுவதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...