இடியும் நிலையில் உள்ள கட்டிடத்திற்கு சீல் வைத்த கோவை மாநகராட்சி

கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவையில் இடியும் நிலையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் 8 பெரிய கடைகளும், 4 சிறிய கடைகளும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், அந்த வணிக வளாக கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வணிக வளாக கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.



ஆறு மாதங்கள் கடந்தும் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்படாமல் பாதுகாப்பற்ற சூழலில் கடைகள் இயங்கி வந்தது. மேலும், கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால், உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கட்டிடத்திலுள்ள எட்டு பெரிய கடைகளுக்கு இன்று சீல் வைத்தனர்.

இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கும், அங்கு கடை வைத்துள்ளவர்களுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தை சீல் வைக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக மூன்று உதவி ஆணையர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...