குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது

நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.


நீலகிரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. அம்மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து வாகனங்கள் குன்னூர் வழியாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.

இதைத் தவிர லாரி போன்ற வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு பாதையிலும் அனுமதிக்கப்படாது. 

இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும்" என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...