திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் பிரதான தெய்வமான பெருமாளை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதனால் ஏழுமலையான் கோவிலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். மேலும், இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். கடும் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக ரூ. 20 லட்சம் மதிப்பிலான லட்டுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.