மூலப் பொருட்களின் விலை உயர்வால் தொழிற்சாலைகளை கடுமையாக பாதிப்பு

கோவை : மூலப் பொருட்களின் தொடர் விலை உயர்வால், கோவையில் உள்ள சிறு, குறு தொழிலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொடிசியா தலைவர் வி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கோவை : மூலப் பொருட்களின் தொடர் விலை உயர்வால், கோவையில் உள்ள சிறு, குறு தொழிலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கொடிசியா தலைவர் வி. சுந்தரம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை சிறு, குறு தொழிற்சாலைகளால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் மையமாக திகழ்கிறது. இந்த சிறு, குறு தொழிலகங்கள் ஜவுளித்துறை, பம்ப், மோட்டார், கம்ப்ரஸர் மற்றும் வால்வுகள், ஆட்டோமொபைல் ஆகியவற்றுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகின்றன. இத்துறையின் வளர்ச்சியானது நிதிப்பற்றாக்குறை, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகள், திறன்மிகு தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அரசுக்கொள்கைகளால் பல

இடையூறுகளை சந்தித்து வருகிறது.

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகத்திற்குப் பிறகு சந்தையில் எளிதாகக் கிடைத்தாலும் ஸ்டீலின் விலை ஏறிக்கொண்டே போனது. இந்த ஸ்டீல், இரும்பு ராடுகள், போன்றவற்றின் அடிப்படை விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு சிறு, நடுத்தர தொழிற்சாலைகளை மோசமாக பாதித்திருப்பதோடு, இந்த தொழிலகங்கள் நலிவுறவும் அதன் விளைவாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் ஏராளமான சிறு, குறு தொழிலகங்கள் இந்த சூழ்நிலைகாரணமாக தங்கள் உற்பத்தியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்த விலை உயர்வு காரணமாகவே பல சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் இயங்காமல் இருக்கும் “செய்ல்” நிறுவன கிடங்கு இந்த நிலையை நேரடியாக எடுத்துக்கூறும். கோவையில் உள்ள “செய்ல்” நிறுவனத்தின் கிடங்கு, பாலம் அமைக்கும் பணியால் கடந்த 2 வருடமாக மூடப்பட்டிருந்தது. தற்போது பாலம் அமைந்துவிட்டபடியால், மீண்டும் இந்த கிடங்கை திறந்து, அதன் மூலம் சரியான விலையில் ஸ்டீல் விற்கப்படவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், முன்பு இருந்ததுபோல், குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு, அரசாங்கத்தின் மூலமாக குறைந்த விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க ஏது செய்ய வேண்டும். எனவே, மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு, போர்க்கால நடவடிக்கையாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கியும், பற்றாக்குறையை போக்குமாறும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, தனது கோவை வளாகத்தை உடனடியாக இயங்கச் செய்து சிறு தொழில்துறை இந்த சிக்கலில் இருந்து விடுபட உதவும்படியும் கேட்டுக் கொள்கிறோம். 

இறுதியாக, இந்தியாவில் உள்ள பெரும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விலை உயர்வை திரும்பப்பெறுவதோடு, ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முந்தைய விலையை தொடர்ந்து மாற்றமின்றி அளிக்குமாறு கொடிசியா கேட்டுக்கொள்கிறது. என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...