ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல், விலாச மாற்றத்துக்கு இனி ஒரே படிவம்

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், விலாச மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், விலாச மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய மோட்டார் வாகன விதி 1989-ல் பின்வரும் விதித்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திருத்தத்தில் முகவரி மற்றும் வயதிற்கு சான்றாக ஆதார் அட்டை சமர்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பழகுனர் உரிமம், புதிய ஓட்டுநர் உரிமம், உரிமத்தில் விலாச மாற்றம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, மேற்கண்ட அனைத்துப் பணிகளையும் படிவம் 2-லேயே பூர்த்தி செய்ய திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் மேற்கண்ட தேவைகளை ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து வரும் ஏப்ரல் 1 முதல் முதல் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...