கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

மு.பு.சு.மதனகோபால் முதலியார் கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். நேற்று முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அன்னதானம், நகைச்சுவை பாட்டு மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், வால்பாறை தாலுகா அளவில் நடைபெறும் முதலாம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்தும், அருகிலுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.