கேள்வித்தாள் கசிவானதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த இரண்டு தேர்வுகளையும் ரத்து செய்துள்ள சி.பி.எஸ்.இ., இந்தத் தேர்வுகளை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. சி.பி.எஸ்.இ., தேர்வில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.