தாய் இறந்தும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய கோவை அரசுப்பள்ளி மாணவர்

நெஞ்சுவலி காரணமாக தாய் உயிரிழந்த நிலையிலும், கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சோகத்துடன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர்.

கோவை: நெஞ்சுவலி காரணமாக தாய் உயிரிழந்த நிலையிலும், கோவையைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சோகத்துடன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர். 

கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வன். அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் போதுத் தேர்வு நடைபெற்றது. ஆனால், இன்று காலை திடீரென அவரது தாய் வெங்கடேஸ்வரி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். 

தாயின் இறப்பு ஒரு புறம் இருந்தாலும் தேர்வை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில், சோகத்துடன் அழுதபடியே பள்ளிக்கு சென்ற அன்புச் செல்வன் தேர்வை எழுதி சென்றார். 

தேர்வு எழுதி முடித்தவுடன், தாய் உடல் வைக்கப்பட்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்ற அவர் உடலைப் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்குச் சென்றார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...