சம்பிரதாயமாக நடத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வெளியீட்டு விழா

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். 



திருப்பூர் மாநகராட்சியின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆணையர் அசோகனிடம், உதவி ஆணையரிடம் சந்தானநாராயணன் பட்ஜெட் புத்தகத்தை வழங்கினார். இதில், மூலதன வரவுகள் ரூ. 1,171 கோடி என்றும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ. 1,165.67 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் ரு. 5.87 கோடி உபரி நிதி உள்ளதாக ஆணையர் அசோகன் தெரிவித்தார். 

பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென 11.15 மணிக்கு அழைத்து 11.20 மணிக்கு பட்ஜெட் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனால், முழு சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்து நிதிநிலை அறிக்கை விளக்க புத்தகமானது முழு விவரமாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் முழு விவர புத்தகத்தை யாருக்கும் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மறைத்து எடுத்து சென்று விட்டனர். அதில், உள்ள பாதகமான விஷயங்கள் வெளிவராமல் இருப்பதற்காக பட்ஜெட் புத்தகம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 



நடப்பாண்டில் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீட்டு வரி, உள்ளிட்ட வரியினங்கள் 400 முதல் 500 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்த விரிவான விவர அறிக்கையை தராமல் மாநகராட்சி ரகசிய பட்ஜெட்டை நூதனமாக அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சியில் தனி அதிகாரிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் கேட்பதற்கு ஆள் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...