குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்: தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மாநகராட்சியின் 74-வது வார்டு ஜி.எம். நகர் மற்றும் கோட்டை புதூர் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் ஜி.எம். நகருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும், நேரில் வரவழைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜி.எம். நகர், சாரமேடு, மஜித் காலனி பகுதிகளில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். செயலற்ற இந்த மாநகராட்சி நிதி இல்லாமல் தத்தளித்து கொண்டுள்ளது. ஏற்கனவே, பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கும் பணம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 



மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் நிதியும் பெற முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை மிரட்டிக் கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்து வருகின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...