போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
கோவை: போக்குவரத்து விதிமீறலால் நடக்கும் விளைவுகள் குறித்து கோவையில் இன்று காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகிவருகிறது. இதனால் தமிழகத்தில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் தேவை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்ற விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே சேர்த்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பு காவல்துறையுடன் இணைந்து சைகை மொழியில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். அவினாசி சாலை, உப்பிலிபாளையம் சிக்னல் முன்பு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நாடகத்தில் முகமூடி வரைந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நாடகத்தின் நிகழ்வு இரண்டாம் கட்டமாக ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகிலும், மூன்றாவது கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையிலும், நான்காவது கட்டமாக விமான நிலைய சிக்னலிலும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் , போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பெரியய்யா கூறுகையில், "காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அதிக ஆர்வத்துடன் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை அருமையாக நாடகமாக நடித்துக் காட்டினர். இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என நம்பிக்கை உள்ளது." என்றார்.