கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை ஆர் எஸ் புரம் அன்னபூர்ணா ஹோட்டலில் சமையலறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் சுமார் 6:40 மணியளவில் சமையலறையில் உள்ள எண்ணெய் சட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த தீயானது சமையலறையில் பரவ ஆரம்பிக்கும் போதே அங்கிருந்த ஊழியர்கள் வேக வேகமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால், தீ பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனிடையே, தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர், சிறிது நேரத்தில் தீயணைக்கபட்டதால் வாடிக்கையாளர் மீண்டும் உள்ளே சென்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்குள் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஆர்.எஸ். புரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.