ஊழலில் முதலிடம் எடியூரப்பா அரசுக்குதான் : அமித்ஷாவின் டங் சிலிப்பால் பதறிப்போன பா.ஜ.க.,

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க., அரசில் தான் அதிக ஊழல்கள் நடைபெற்றதாக பா.ஜ.க., தலைவர் அமித்ஷா கூறியது, பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், "சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.  அப்போது, “ஊழல் மலிந்த ஆட்சிக்குப் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார். இந்த சம்பவத்தில், அமித் ஷாவுக்கு அருகில்தான் எடியூரப்பா உட்கார்ந்திருந்தார்.

அமித் ஷா கூறியதைக் கேட்டதும் அவர் ஷாக் ஆகிவிட்டார். அமித் ஷாவுக்கு அருகில் இருந்த மற்றொரு தலைவர் உடனடியாக அவருக்கு தவறை சுட்டிக்காட்டினார். 

சுதாரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக மாற்றிக் கொண்டு காங்கிரஸ் அரசு என்று கூறினார்.  அமித்ஷாவின் இந்தப் பேச்சு உடனடியாக சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. பலரும் இதனைப் பகிர்ந்தனர்.  குறிப்பாக, காங்கிரஸ் கட்சியினர் அதிக வேகமாகப் பகிர்ந்தனர். 

முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை விட்டுவைக்கவில்லை. அமித்ஷா பேசிய வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பொய்யை மட்டுமே பேசிவரும் அமித்ஷா இறுதியாக இன்று உண்மையைப் பேசிவிட்டார். நன்றி அமித்ஷா’ என்று குறிப்பிட்டார். 

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...