கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை : கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பேரூரில் உள்ள பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தினர். தேர் வீதியுலா செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலைகளின் இருபுறமும் சூழ்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டம் நடைபெற்றதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.