வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிக்கிறது : கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா

பழங்குடியினர்களுக்கான வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாகக் கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினர்களுக்கான வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சிப்பதாகக் கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு தெரிவித்துள்ளார். 

நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார உரிமைக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடந்தது. இதில், கேரளா ஆதிவாசி கோத்ர மகாசபா நிறுவன தலைவர் ஜானு கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் பழங்குடிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உணவு, வாழ்விடம் தேடி பழங்குடியின மக்கள் அகதிகளாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும், பல பழங்குடியின கிராமங்கள் நடைபாதை, சாலை, கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகின்றன. 



இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கென பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அவை முறையாகச் சென்றடைவது இல்லை. தமிழகத்திலும் பண்டைய பழங்குடிகளின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியின்மை போதிய குறைபாடுகள் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பழங்குடியினர்களுக்கு வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இந்தப் போக்கை உடனடியாக கைவிட்டு பழங்குடியினருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க அரசு முன்வர வேண்டும்.

மேலும், சமீபகாலமாக தென்னிந்திய பழங்குடிகளை வனங்களை விட்டு வெளியேற்றுவதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எங்களை அடக்குமுறை செய்யும் வனத்துறையினர், வனங்களில் சட்டவிரோதமாக காட்டேஜ்கள், விடுதிகள் போன்றவற்றை கட்ட அனுமதித்து, இயற்கை வளங்கள் சுரண்டக் காரணமாகின்றனர்," என்றார். 

இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய தோடர், கோத்தர், பனியர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...