"பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும்"

பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார். 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெண்களுக்குத் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. ஒரு பெண் படித்தால் வீட்டையும், சமுதாயத்தையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அதைப்போலத் தான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே, சிறுவயது முதலே தங்களது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...