‘திருமதி இந்தியா‘ பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு

தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி : தேசிய அளவில் நடக்கும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்திற்கான இறுதிப் போட்டிக்கு உதகையைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு 'குயின் ஆப் சஸ்டெயின்ஸ் 2018' என்ற பெயரில், ஆண்டுதோறும் குடும்ப தலைவிகளுக்கான 'திருமதி இந்தியா' பட்டத்துக்கான போட்டியை நடத்தி வருகிறது. குடும்ப தலைவிகள் மத்தியில் தைரியம், அவர்களின் திறமையை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரு சுற்றுகளின் முடிவில், நாடு முழுக்க இருந்து 49 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இதில், நீலகிரி மாவட்டம், லவ்டேல் சர்வதேச பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரியும் நிஷாசிங் (32) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் கணவர் தாகூர் கமல் சிங் (36) இதே பள்ளியில் உணவு தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...