மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் காட்டுயானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுமுகை வனத்துறையினர் விசாரணை நடத்தினர். 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு காட்டுயானை, காட்டுமாடு, மான் என அரியவகை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. இதனால், அவைகள் வனத்தை விட்டு நீர்நிலைகளை தேடி அழைந்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மயில்மொக்கை என்ற பகுதியில் நான்கு யானைகள் கொண்ட கூட்டம் தண்ணீர் தேடி வந்துள்ளது. அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் இன்று மாலை ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கால்நடை மருத்துவர் தியாகராஜன் மற்றும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, யானை உடல் சோர்ந்து கீழே விழுந்து மயங்கி பரிதாபமாக உயிரிழந்தது. 



யானையை பரிசோதித்த மருத்துவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, யானை உயிரிழந்ததை உடற்கூறு ஆய்வு மூலம் உறுதி செய்தனர். பின்னர், யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. தற்போது, வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை அடர்ந்த வனத்தில் அமைப்பதை அதிகரிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...