இயற்கையால் உருவாக்கப்பட்ட 'டாரா ரெட்' நிறம் அறிமுகம்

செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறத்தை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை : செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறத்தை வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 



உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை நிறமிகளால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், செயற்கை நிறமிகளுக்கு மாறாக இயற்கையாக 'டாரா ரெட்' என்ற புதிய நிறம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயற்கை நிறமியானது, ரெட் டாமரைண்ட், டாமரண்டிஸ் இண்டிகா போன்ற மர வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

"தற்போது, இந்த இயற்கை நிறமியை உணவு, மருந்து, அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது." என வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் செந்தில்குமார் கூறினார். 

இந்த நிறத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ரெட் டாமரைண்ட் மரங்கள் தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...