ஆந்திராவின் ஆளுநராகிறாரா கிரண்பேடி..?

ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி ஆளுநராகப் பதவி வகித்த நரசிம்மன், தெலுங்கானா, ஆந்திரா என இருமாநிலங்களாகப் பிரிந்த பின்னரும், சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்து இருமாநிலங்களின் பொது ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆளுநர் நரசிம்மன் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்திலேயே இருப்பதால் தெலுங்கானா மாநிலத்துக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், ஆந்திராவை பாரபட்சத்துடன் நடத்துவதாகவும், ஆந்திராவுக்கு புதிய ஆளுநரை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதற்காக மத்திய அரசிற்கு கடிதத்தையும் ஆந்திர அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்திய பா.ஜ.க. அரசில் இருந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சி சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த 2 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பா.ஜ.க., மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினர் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆந்திர மாநிலத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதனை சந்திரபாபு நாயுடு பயன்படுத்தவில்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார். இதைக் கண்டித்த சந்திரபாபு நாயுடு, அமித்ஷா பொய்களை கூறுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு புதிய ஆளுநராக தற்போது புதுச்சேரியின் ஆளுநராக இருக்கும் கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது, ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கிரண்பேடி திறம்பட சமாளிப்பார் என்று மத்திய அரசு கருதுகிறது. மேலும், புதுச்சேரியில் ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கும், புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையில் மோதல் போக்கும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், ஆந்திர மாநில ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...