விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள்: மே 6-ல் கோரிக்கை மாநாடு

விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர்: விவசாய நிலங்கள் வழியாக உயிர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து ஈரோட்டில் மே 6-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



தமிழகத்தில் பவர்கிரிட் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து பல்வேறு உயர் மின் அழுத்த பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் வழியாகவே செல்வதால் உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் 90 மீட்டர் அளவிற்கு விவசாயம் மேற்கொள்ளக் கூடாது, கிணறுகள் வெட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் பிரச்சனைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. 

தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள்களாக பதிக்க வலியுறுத்தியும், விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்தும் வரும் மே 6-ம் தேதி ஈரோட்டில் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...