6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட வணிக வளாக குளிர்பதனக் கிடங்கு ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கும் நிலையில், அது பயன்பாட்டிற்கு வருவதற்குள் இடிந்து விழும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் விவசாய பூமிகள் நிறைந்த வேளாண் உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. இங்கு வாழைக்கு அடுத்தபடியாக காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விவசாயிகள் சார்பில் காய்கறிகளை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் வகையில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.2 கோடி செலவில் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. 

அதற்காக சிக்கதாசம்பாளையத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட கடைகள், காய்கறிகள் கொட்டும் கொட்டகை, தரம் பிரிக்கும் மையம், 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. 

ஆனால், இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதனை பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் அதன் உறுதித் தன்மை இழந்து வருவதுடன், கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடியும் நிலை ஏற்பட்டு வருகிறது.



கட்டிடம் கட்டப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமாக இருந்தாலும் அதற்கு வழித்தடம் இல்லாத காரணத்தால் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. தனியாரிடம் இருந்து வழித்தடத்தை வாங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட போதும், வருவாய்த் துறையினர் தனியார் இடத்திற்கு உரிய பணம் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் இந்த கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...