முன்னாள் ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு 3 ஆண்டு சிறை

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை: வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4.91 லட்சம் மோசடி செய்த முன்னாள் ரயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் இழப்பீடு தர கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை பீளமேடு பகுதியை அடுத்த ஜீவா வீதியை சேர்ந்தவர் குமார் (54). கடந்த 1989-ம் ஆண்டு வரை ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணியாற்றினார். முறையாக பணிக்கு வராததால் கடந்த 1991-ம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியன் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து கோவையைச் சேர்ந்த 7 பேரிடமிருந்து ரூ. 4 லட்சத்து 91ஆயிரத்து 200 மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 6 லட்சத்து 36 ஆயிரத்து 800 நஷ்ட ஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார்.

அரசு பணியிடங்களில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குமார் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு மோசடி இவர் மீது தொடரப்பட்டு கோவை 6-வது மற்றும் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...