கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்: மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க., புகார்

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஒருதலைபட்சமாக நடப்பதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ., புகார் கூறியுள்ளார்.

கோவை: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஒருதலைபட்சமாக நடப்பதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தி.மு.க., எம்.எல்.ஏ., புகார் கூறியுள்ளார்.

பால் உற்பத்தி, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் சர்க்கரைதுறை என 15 அரசுத்துறை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்துகிறது. நேற்று நடந்த மனு தாக்கலில், கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள் அ.தி.மு.க வினருக்கு சாதகமாக நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறை மற்றும் அடியாட்களை வைத்து பிற கட்சியினர் மிரட்டப்படுவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக் (தி.மு.க.) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை போல, இந்த முறையும் ஆளுங்கட்சியினர் வேட்புமனு மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தி.மு.க., உள்ளிட்ட மற்றவர்களின் மனு ஏற்கப்படவில்லை. மற்ற கட்சியினரின் வேட்புமனுவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து கட்சியினரை திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...