காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை: தேர்தல் ஆணையம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்டவை.அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது. ஓட்டுப்பதிவு நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலைக் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்படும். தேர்தலில் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் வி.வி.பி.டி., எந்திரம் பயன்படுத்தப்படும். வேட்பாளர்களின் செலவீனத்தை கண்காணிக்கப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் வரை செலவு செய்யலாம். கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும். மத்திய மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். என்றார். 

கடைசி நாள்: ஏப்.,24 

வேட்புமனு பரிசீலனை: ஏப்.,25

வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்.,27

ஓட்டுப்பதிவு: மே 12

ஓட்டு எண்ணிக்கை: மே15

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்திற்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை. இதற்கு எந்தத் தடையும் இல்லை. வாரியம் அமைப்பது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்படாது என ராவத் கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...