திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல்: விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றம் நடவடிக்கை

விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி திருப்பூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் குமரன் சாலையில் இயங்கி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடமானது விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்புர் மாநகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருப்பூர் மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் கட்டிடத்திற்கு சீல் வைத்தார்.



விதிமுறைகளை மீறி குமரன் சாலை மற்றும் புது மார்க்கெட் வீதியில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைத்து கட்டிடங்களுக்கும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...