உதகை சேரிங் கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: உதகை சேரிங் கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இங்குள்ள இயற்கை காட்சிகளையும், இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த 1880-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆளுநராக இருந்த வில்லியம் பேட்ரிக் ஆடம் என்பவாரல் நீரூற்று ஒன்று அமைக்கப்பட்டது, அவரது நினைவாக ஆடம் நீருற்றாக தற்போது பாரமரிக்கப்பட்டு வருகிறது.

குறுகிய நகரமான உதகையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலில் அதிகரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்ட மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆடம் நீருற்று பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் மற்றும் பூங்காவை அகற்றி பார்க்கிங் செய்ய திட்டமிட்டு நேற்று மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பொது மக்கள் 130 வருடங்களுக்கும் மேலான பாரம்பரிய சின்னத்தை அகற்றவும் அதன் அழகை சீர்குலைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடக்கூடாது என்று கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "பாரம்பரிய சின்னம் என்பதால் இதுகுறித்து மக்களிடையே கருத்து கேட்கும் போது இரு விதமான கருத்துக்கள் கிடைத்தது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கலந்தாலோசித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும்." என்றார்.