திருப்பூர்: திருப்பூர் காது கேளாதோர் பள்ளியை மீட்டுத் தரக்கோரியும், பள்ளி நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரியும் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நிர்வாகத்தை மாற்றுத்திறனாளியான முருகசாமி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி லட்ச கணக்கில் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என்று மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களும், தற்போது பயின்று வரும் மாணவர்களும் என 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அவர்களை காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து பள்ளியை மீட்டு தர கோரியும், முருகசாமி மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் தரையில் அமர்ந்து மவுன மொழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.