ஸ்டெர்லைட் விவகாரம்: வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, அம்மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. 

இந்த சூழலில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக இன்று காலை வ.உ.சிதம்பரனார் கல்லூரி வாசல் முன் திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...