கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.
கோவை: கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.
கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிலரங்கில் வெவ்வேறு விதமான தீ விபத்துகளை கையாள்வது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சூழலியல் ஆர்வலரான முகம்மது சலீம் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு வனப்பரப்புகளில் தீ விபத்து ஏற்படுவதால் சூழலியல் சக்கரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.

பி.எஸ்.ஜி. குழுமத்தின் பாதுகாப்பு அதிகாரி கலந்து கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை பயிற்சிகளை தன்னார்வலர்களுக்கு அளித்தார்.