ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.  இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அம்மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது.  ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகளைக் கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பின்னர், மாலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். விடிய விடிய நடைபெற்ற போராட்டத்தில்  ஏராளமான பிஞ்சு குழந்தைகளும் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...