தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அம்மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகளைக் கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பின்னர், மாலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். விடிய விடிய நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான பிஞ்சு குழந்தைகளும் கலந்து கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றது.