சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியங்கிரி நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் கார் மூலம் திருநள்ளாறு கோவில் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி வந்தார். 

கார் காங்கேயம் சாலையை கடந்து வளம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்புறம் உள்ள ஹெட்லைட்டில் திடீரென புகை வந்துள்ளது . இதனைக் கண்டு உடனடியாக காரை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி மற்றும் அவரது நண்பர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 



இந்த தீ விபத்தால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...