கோடை சுற்றுலா: உதகை ரோஜா பூங்காவின் சிறப்புகள்

கோடைக்காலத்தை ரம்யமாகவும், 'குளு-குளு' என்றும் கழிக்க விரும்பும் மக்கள் நம் ஊரில் ஏராளம். ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியைக் கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.


நீலகிரி: கோடைக்காலத்தை ரம்யமாகவும், 'குளு-குளு' என்றும் கழிக்க விரும்பும் மக்கள் நம் ஊரில் ஏராளம். ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியைக் கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.

சரி..! அப்படி, ஊட்டியில் செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம். அந்த பகுதியின் சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த வாராந்திர கட்டுரை.

உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரோஜா பூங்கா. கடந்த 1995-ம் ஆண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 100-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. இதன் நினைவாக விஜய நகர பண்ணையில் ஜெ.ஜெ ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பூங்காவை தொடங்கி வைத்தார்.



25 ஆயிரம் செடிகள்

கடந்த 1995-ம் ஆண்டு 1919 ரகங்களில் 18 ஆயிரம் ரோஜா செடிகளுடன் இந்த பூங்கா தொடங்கப்பட்டது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த பூங்காவிற்கு நூற்றாண்டு ரோஜா பூங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. தொடர்ந்து, பூங்காவில் படிப்படியாக புதிய ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டன. 

முதலில் 3 மாடங்களில் இருந்த ரோஜா பூங்கா தற்போது அனைத்து மாடங்களிலும் உள்ளது. தற்போது 3 ஆயிரத்து 600 ரகங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் இப்பூங்காவில் உள்ளன. பூங்காவின் சிறப்பம்சமாக பச்சை நிறத்திலும் மலரக்கூடிய ரோஜா மலர் செடி உள்ளது. இந்த ரோஜா பூங்காவிற்கு கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச புகழ் மிக்க ரோஜா பூங்கா என்ற விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



பெரும்பாலும்  ஏப்ரல் மற்ரும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகாரிக்கும் நிலையில், தற்போது சாலைகள் அகலப்படுத்தப்பட்டு பூங்கா வரை வாகனங்கள் செல்லு வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை சீசனின் போது இயக்கப்படும் சுற்று பேருந்துகள் மூலமாகவும் ரோஜா பூங்காவிற்கு செல்லலாம். 

கட்டண விவரம்:

* பெரியவர் - ரூ.30

* சிறியவர் - ரூ.15

* காமிரா - ரூ.50, 

* வீடியோ காமிரா - ரூ.100 

பார்க்கிங் கட்டணம்:

* பேருந்து - ரூ.100 

* சிற்றுந்து - ரூ.75

* நான்கு சக்கர வாகனங்கள் - ரூ.40 

* இரு சக்கர வாகனம் - ரூ.15 

என்ற முறையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.



புகழ் பெற்ற இந்த ரோஜா பூங்காவில் வரும் மே மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் 16-வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...