தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, குற்றவாளிகளை விரைவில் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி உத்தரவிடப்பட்டது. 

அதன்படி, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் ஆனந்தராஜ், சுந்தரன், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அமைக்கப்பட்டு எதிரிகளைப் பல இடங்களில் தேடி கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், குற்ற வழக்கில் தொடர்புடைய கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ஊட்டி வெல்பெக் எஸ்டேட் அண்ணாநகரைச் சேர்ந்த ராஜா (33) ஆகிய 2 பேரை கண்டுபிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் இருந்து சுமார் 15 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிடிபட்ட இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விநாயகம் தீவிர முயற்சி செய்து நேற்று இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவினை பெற்றார். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சார்வு செய்யப்பட்டது.



Newsletter

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...